பேட்டரியில் ஓடும் மிதிவண்டியை உருவாக்கிய தனியார் தொழிற்சாலை தொழிலாளி.!புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்.!

Subscribe our YouTube Channel

தமிழ்நாட்டின் ஒசூரின் ஆவலப்பள்ளி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருபவர் பாண்டியராஜன். ஐடிஐ மெக்கானிக் படித்துள்ள இவர் அருகிலுள்ள கனரக தொழிற்சாலையில் பணி புரிந்து வருகிறார்.தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது.சில தொழிற்சாலைகள் பணியாளர்கள் மற்றும் நேரக்கட்டுப் பாடுகளுடன் இயங்கி வருகின்றன.இந்நிலையில், பேட்டரி(battery)யில் ஓடும் மிதிவண்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த மிதிவண்டி(cycle) தயாரித்தது பற்றி கூறிய பாண்டியராஜன், நான் மிதிவண்டியில் தான் பணிக்கு செல்கிறேன்.

நான் வசிக்கும் பகுதி மேடுபள்ளங்கள் நிறைந்தது.அதனால் நீண்ட தூரம் மிதிவண்டியில் செல்வது கடினம்.இதனால் எனக்கு தோன்றிய சிந்தனைகளை வைத்து முயற்சி செய்தென்.தற்போது முழுமையாக பேட்டரியில் ஓடும் மிதிவண்டியை தயாரித்துள்ளேன்.பேட்டரியில் சார்ஜ்(charge) தீர்ந்தவுடன் சைக்கிளில் சாதாரணமாக பெடல் போட்டும் செல்லலாம்.

அதாவது 25 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இந்த மிதிவண்டிக்கு 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகியுள்ளது.அரசாங்கம் உதவி செய்தல் இந்த மிதி வண்டியை பயன்பாட்டுக்கு கொண்டு செல்லலாம். மேலும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தல் இந்த மாதியான மிதிவண்டி உருவாக்கி தரப்படும் என கூறினார்.