பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு நுரையீரல் புற்று நோய்.!

Subscribe our YouTube Channel

பிரபல பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான சஞ்சய் தத்க்கு கடந்த 9ம் திகதி கடும் மூச்சு திணறலுடன் லேசான நெஞ்சு வழியும் ஏற்பட்டது.இதன் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் நுரையீரல் புற்றுநோர் ஏற்பட்டிருப்பதாகவும் சிகிச்சைக்காக அவர் அமேரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சஞ்சய் தத்தின் நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து தெரிய வருவதாவது,“சஞ்சய் தத்திற்கு வந்துள்ள புற்று நோய் குணப்படுத்தக் கூடியதுதான்.

எனினும்,கடுமையான மருத்துவ சிகிச்சை ஆகும்.எனவே,அவர் உடனடியாக அமெரிக்கா செல்ல இருக்கிறார்”என தெரிய வந்துள்ளது.இது குறித்து தனது Twitter பக்கத்தில் பதிவிட்ட சஞ்சய் தத்,“நண்பர்களே, மருத்துவ ரீதியிலான காரணங்களுக்காக நான் என் பணியிலிருந்து சிறிய ஓய்வை எடுத்துக்கொள்கிறேன்.என் குடும்பத்தினரும்,நண்பர்களும் என்னுடன் இருக்கின்றனர்.

எனது நலவிரும்பிகள் யாரும் கவலைப்படவோ,தேவையின்றி எதுவும் யூகிக்கவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அன்பு மற்றும் நல் வாழ்த்துகளோடு நான் விரைவில் மீண்டும் திரும்பி வருவேன்”எனப் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பூரண நலம்பெற வேண்டி திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது இரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.