பிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்-‘புத்தகங்களை படியுங்கள் அதற்கு நான் உதவி செய்கிறேன்’என அறிவுரை வழங்கிய சோனு சூட்.!குவியும் பாராட்டுக்கள்

Subscribe our YouTube Channel

இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் தொழிலாளர்கள் முதல் தினக்கூலி செய்பவர்கள் வரை கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு சிரமப்படும் நபர்களுக்கு நடிகர் சோனு சூட் பல உதவிகளை செய்து வருகிறார்.அந்த வரிசையில் வறுமை காரணமாக சிலம்பம் சுற்றி வாழ்க்கையை நகர்த்தி வந்த புனேவை சேர்ந்த மூதாட்டிக்கு தற்காப்பு பள்ளி கொடுத்தார்.ஆந்திராவை சேர்ந்த ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆவன செய்து கொடுத்தார்.

ரஷ்யாவில் சிக்கி தவித்த தமிழக மருத்துவ மாணவர்களுக்கு தனி விமான ஏற்பாடு செய்தார்.இப்படி அவர் செய்த உதவிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.இந்நிலையில் சோனு சூட்டின் ரசிகர் ஒருவர், தன்னுடைய நண்பர்கள் அனைவரும் வீட்டில் பிளே ஸ்டேஷன் கேம் இருப்பதால் விளையாடி வருகின்றனர்.

என்னிடம் இல்லை எனக்கு பிளே ஸ்டேஷன் வாங்கி தருகிறீர்களா என்று ட்வீட் செய்திருந்தார்.அதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட், உன்னிடம் பிளே ஸ்டேஷன் இல்லை என்றால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். ஏதாவது நல்ல புத்தகங்களை வாசி,அது வேண்டுமானால் வாங்கி தருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அனைவரும் சோனு சூட்டின் இந்த பதிலுக்கு அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.