இளம்பெண்ணுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த இளைஞர் கைது.!

Subscribe our YouTube Channel

சென்னை மாவட்டம் சூளைமேட்டில் தாயாருடன் வசித்து வரும் 26 வயதுடைய இளம் பெண்ணொருவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் ஓகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்திலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்த பெண்ணின் செல்போனுக்கு ஆபாச புகைப்படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை செய்து வந்துள்ளார். தொடர்ச்சியாக அப்பெண்ணின் whatsapp க்கு ஆபாச வீடியோக்களை அந்த சந்தேக நபர் அனுப்பி வந்ததால்,பிரிந்து வாழும் கணவனின் தூண்டுதலாக இருக்கும் என சந்தேகம் அடைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தொந்தரவு தந்த நபரை கையும், களவுமாக பிடிக்க தனது வீட்டின் முகவரியை கொடுத்து வரவழைத்துள்ளார்.வீட்டிற்கு வந்த அவரை வசமாக அருகிலிருந்த நபர்களின் உதவியோடு பிடித்து விசாரித்தனர். அப்போது குறித்த சந்தேக நபர் 29 வயதான விமல்ராஜ் என்பதும் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் இவர் அமேசன் பொருட்கள் டெலிவரி செய்யும் ஊழியர் என்பதும் தெரிய வந்துள்ளது.

தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் அவரை சூளைமேடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவரின் தூண்டுதலால் பாலியல் தொந்தரவா என சந்தேகிக்கும் காவல்த்துறையினர் தலைமறைவாக உள்ள அந்த பெண்ணின் கணவரை தேடி வருகின்றனர்.