கொரோனாவால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்.!வெளியான வீடியோ.!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் தேனி மாவட்டத்தின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அப்பெண் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பேரனால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனாபரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.இதனை தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அப்பெண் கடந்த வெள்ளியன்று உயிரிழந்தார்.இந்த தகவலை கூடலூர் நகராட்சியின் சுகாதார பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது.

உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்புவதாக கூறினார்.ஆனால் 12 மணிநேரம் ஆகியும் அம்புலன்ஸ் வரவில்லை.இதனால் அப்பெண்ணின் சடலத்தை பேரன் தள்ளுவண்டியில் வைத்து மயானம் கொண்டு சென்றுள்ளான்.கூடலூர் நகராட்சி அலட்சிய போக்காக நடந்து கொள்வதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.