டெல்லியில் மற்றொரு நிர்பயா.!பாலியல் பலாத்காரம் செய்து 12 வயது சிறுமியை கத்தரிக்கோலால் குத்திய கொடூரம்.!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த வியாழக்கிழமை 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கத்தரிக்கோலால் பல முறை உடலில் குத்தப்பட்டுள்ளார். சிறுமியின் தனிப்பட்ட பக்கங்கள் மற்றும் குடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் தலை, இடுப்பு பகுதிகளிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. படுகாயங்களுடன் சிறுமி அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவனை கைது செய்துள்ளனர்.மேலும்,குற்றம் சாட்டப்பட்ட நபர் போதைக்கு அடிமையானவர் எனவும் பல கிரிமினல் வழக்குகளில் சிறைக்கு சென்று ஜாமினில் வெளியில் வந்தவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுவரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சுமார் 100க்கும் மேற்பட்டோரை விசாரணை செய்துள்ளனர்.