எக்மோ உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் – நலம் பெற வேண்டி பிரபலங்கள் கூட்டுப் பிரார்த்தனை.!வீடியோ

Subscribe our YouTube Channel

கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக பிரபல பாடகர் S P. பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 5ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் அவரது உடல் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளதாக கடந்த 17ம் திகதி மருத்துவ நிர்வாகம் தகவல் வெளியிட்டது.மேலும் அவ்வப்போது அவரின் உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் தகவல் வெளியிட்டு வருகிறது.அதன்படி தற்போது SPB அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மற்றும் எக்மோ கருவிகளுடன் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும்,அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகின்றது என்றும் அவரது உடல்நிலை தற்போதுவரை திருப்திகரமான நிலையில் உள்ளது என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை)பாடகர் S.P. பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கூட்டுப் பிரார்தனையில் ஈடுபட்டனர்.