‘கல்வியே முக்கியம்’பிள்ளைகளின் படிப்புக்காக,தன் தாலியை விற்று தொலைக்காட்சி வாங்கிய ஏழைத் தாய்.!

Subscribe our YouTube Channel

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான பாடசாலை நிர்வாகங்கள் மாணவர்களுக்கு ஒன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக பாடம் நடத்தி வருகின்றன.இதனால் சில ஏழைக் குடும்பங்கள் செல்போன் மற்றும் தொலைக்காட்சி வாங்குவதற்கு வசதியில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர்.இந்நிலையில் பிள்ளைகளின் படிப்புக்காக தாய் ஒருவர் தனது தாலியை விற்று தொலைக்காட்சி வாங்கியுள்ளார்.கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தை சேர்ந்தவர் கஸ்தூரி.

2 குழந்தைகளுடன் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த சமூகம் அத்தியாவசியம் என கருதும் பல பொருட்கள் இவர்களுக்கு எட்டாகனியாகவே இருந்து வருகிறது.கிடைத்த வேலைகளை செய்து குழந்தைகளை வளர்த்து வரும் கஸ்தூரிக்கு, கொரோனா ஊரடங்கு பேரிடியாக அமைந்தது.இந்நிலையில், தொலைகாட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படும் என அறிவித்தது கர்நாடக அரசு.

எனினும், அன்றாட வாழ்விற்கே சிரமப்படும் கஸ்தூரியின் வீட்டில் டிவி இல்லை.அரசின் அறிவிப்பால் புதிதாக டிவி வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டார் கஸ்தூரி.பலரிடம் கடன் கேட்டும் யாரும் கொடுக்க முன்வரவில்லை.தான் தான் படிக்கவில்லை, தன் பிள்ளைகளாவது படிக்க வேண்டும் என போராடி கொண்டிருந்தார் கஸ்தூரி.

இதனால் அவர் தனது தாலிச் சங்கிலியை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அதன் மூலமாக தொலைக்காட்சி வாங்கியுள்ளார். அந்த தொலைக்காட்சி மூலமாக அவரின் இரு பிள்ளைகளும் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் படிப்பதைக் கண்டு பூரிப்படைகிறார் இந்த தாய்.