கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கொலை செய்த கணவன்.!காவல்நிலையத்தில் சரண்.!

Subscribe our YouTube Channel

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான நீலாவதி.இவர் கணவரை பிரிந்து 19வயது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.இந்நிலையில்,(நேற்று) வியாழக்கிழமை உடலில் கத்திக்குத்து காயங்களுடன் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இந்த கொலை சம்பவம் நடக்கும் போது மகன் வீட்டில் இல்லை.இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் மகனை பிடித்து விசாரித்தல் உண்மை தெரிந்து விடும் என கருதினர்.இது குறித்து காவல்துறையினரிடம் மகன் கூறும் போது,சம்பவம் நடக்கும் போது நான் வீட்டில் இல்லை.எனக்கு என் தந்தை மீது தான் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளான்.

இந்நிலையில் நீலாவதியின் கணவர் ராம்தாஸ் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.அதன் பின் கொலைக்கான காரணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்தன.நீலாவதி அந்த பகுதியை சேர்ந்த இளைஞருடன் பழகி வந்ததை நேரில் பார்த்ததாகவும் அதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியிடமிருந்து தான் பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறினார்.மேலும்,கணவர் தன் மீது சந்தேகம் கொண்டு கொடுமை படுத்துவதாக கூறி மகனையும் தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.

இருப்பினும் மகனுடன் தந்தை தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில்,சம்பவத்தன்று நள்ளிரவில் படுக்கை அறையில் மின்விளக்கு இருந்ததாகவும் அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது மனைவி குறித்த நபருடன் இருந்ததை பார்த்ததாகவும் கூறினார். இதனை தொடர்ந்து அந்த இளைஞர் அங்கிருந்து ஓடி விட்டார். தொடர்ந்து அங்கிருந்த மனைவியை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் .