பிரபல பாடகியின் உறவினர் எனக்கூறி பலகோடி பண மோசடி செய்த இளைஞர் கைது.!

Subscribe our YouTube Channel

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சைதன்யா.இவர் பிறரிடம் தன்னை ஒரு பாடகர் என கூறி வந்துள்ளார்.அவ்வாறே தனது முகநூலிலும் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் தெலுங்கு பிரபல பின்னணி பாடகியான சுனிதாவுக்கு இரசிகர் பட்டாளமே உண்டு என கூறலாம்.சுனிதாவின் பெயரை கூறிக்கொண்டு அவரின் இரசிகர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார் சைதன்யா. அப்படி ஒரு பெண்ணிடம் முகநூலில் அறிமுகமாகி அந்த பெண்ணின் வாட்ஸஅப் இலக்கத்தை தெரிந்து கொண்டு,வாட்ஸ் ஆப்பில் சுனிதா படத்தை ஸ்டேட்டசாக வைத்து அந்தப் பெண்மணியிடம் தான் பாடகி சுனிதா என அறிமுகமாகியுள்ளார்.

அதனை நம்பிய பெண்ணிடம் கேரளாவில் இயங்கி வரும் தனது அறக்கட்டளைக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.பிரபல பாடகியே தன்னிடம் கேட்டதால் வாட்ஸ் ஆப்பில் வந்த வங்கிக் கணக்கிற்கு சில தவணைகளில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் வரை அளித்துள்ளார்.பின்னர் பாடகி சுனிதாவிடம் வீடியோ காலில் பேச வேண்டும் என பலமுறை முயற்சி செய்த போது, சைதன்யா எச்சரிக்கை அடைந்து அவரை பிளாக் செய்து விட்டார்.இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து சைதன்யாவைக் கைது செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.அதில் பல திடுக்கிடும் தகவல்களை நாகசைத்தன்யா கூறியுள்ளான்.இதற்கு முன்பும் பல நபர்களிடம் பாடகி சுனிதாவின் உறவினர் என பழகி பல லட்சம் வரை மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது.மேலும் சுனிதாவிடம் கூறி திரைப்படங்களில் பட வைப்பதாகவும் மோசடியில் ஈடுபட்டுள்ளான்.

இந்நிலையில் தனது பெயரைச் சொல்லி மோசடி நடப்பதாகவும் ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் ஜூலை இறுதியில் பாடகி சுனிதா ஒரு வீடியோ பதிவு மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.கொரோனாவிற்கு கூட அஞ்ச வேண்டியதில்லை; இதுபோன்ற நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது என வீடியோவில் பாடகி சுனிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.