முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு புகார்.!

Subscribe our YouTube Channel

பெண் மருத்துவரும் தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளருமான பீலா ராஜேஷ் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முன்னின்று நடத்தியவர் பீலா ராஜேஷ்.தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தததாவல் அதிரடியாக பீலா ராஜேஷ் சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருது மாற்றப்பட்டார்.

இவருக்கு பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகரியாக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்டார்.இந்நிலையில்,பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் வாங்கிய சொத்துக்களை குறிப்பிட்டே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.செந்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த தலைமை செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.