பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ‘பாஸ்’ ஆக்கிய முதல்வருக்கு நன்றி-வைரலாகும் மாணவனின் போஸ்டர்.!

Subscribe our YouTube Channel

முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டதுடன் பொதுத் தேர்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என அரசு அறிவித்தது. இந்நிலையில் கடந்த 10ம் திகதி 10 வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டன.இதில் தேர்வு எழுதி இருந்தால் தேர்ச்சியை பெற்றிருக்க முடியாது என நினைத்த மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவன் தன்னை தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி என தனது முகநூளில் பதிவிட்டுள்ளான்.

அந்த பதிவில் பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி.என்னை பார்த்து ஏளனமாக சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி அமைக்கப்பட்ட அந்த போஸ்டரை சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.