கையில் கிடைத்த வைரத்தினால் அதிஷ்டம்.!ஒரே இரவில் திடீர் கோடிஸ்வரனான சுரங்க தொழிலாளி.!

Subscribe our YouTube Channel

மத்திய பிரதேசத்தில் சுரங்கத் தொழிலாளி ஒருவர் மூன்று வைரக்கற்களை கண்டெடுத்து அதன் மூலம் ஒரே இரவில் கோடீஸ்வரராக உயர்ந்துள்ளார்.அதாவது பண்ணா மாவட்டத்திலுள்ள ஆழமற்ற சுரங்கம் ஒன்றில் சுபால் என்ற சுரங்க தொழிலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 7 1/2 கரட் மதிப்புடைய அந்த மூன்று வைரக் கற்களை தொழிலாளி கண்டெடுத்தார்.அதனையடுத்து அந்த வைரக்கற்களை சுரங்க அதிகாரியிடம் சுவால் ஒப்படைத்தார்.

இந்த வைரக் கற்கள் ஒவ்வொன்றும் 30 முதல் 35 லட்சம் வரை மதிப்புடையவை எனவும் அவை அரசு விதிப்படி ஏலமிடப்பட்டு பின்னர் 12% வரி கழிக்கப்பட்டு 88% தொகை பின்னர் சுரங்கத் தொழிலாளியிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரி கூறியுள்ளார் .இதனால் ஒரே இரவில் சுரங்க தொழிலாளி கோடீஸ்வரராக மாறியுள்ளார் சுபால்.