கூகுள் நிறுவனத்தின் புதிய படைப்பாக ஆன்லைன் விசிட்டிங் கார்ட் அறிமுகம்.!

Subscribe our YouTube Channel

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நவீன உலகில் அறிவியல் ரீதியாகவும் வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்களுடன் முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்.இந்த காலகட்டத்தில் தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிறு வியாபாரிகள் வணிகர்கள் என பெரும்பாலானவர்கள் விசிட்டிங் கார்டை பயன்படுத்தி வருகின்றனர்.இது போன்ற விசிட்டிங் கார்டை கூகுள் தற்போது விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு என்ற முறையில் அறிமுகப் படுத்தியுள்ளது.இந்த சேவைக்கு peoples cards என்று பெயரிட்டுள்ளது. இந்த சேவையினை மொபைல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.இ சேவை போன்றே இ விசிட்டிங் கார்டு என்றும் இதனை அழைக்கலாம்.

மொபைல்போன் வாயிலாக தங்களுடைய விசிட்டிங் கார்டை மற்றொருவருக்கு மிக எளிதில் பரிமாறிக் கொள்ளலாம்.Google people card என்ற online visiting card ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது Google.இதில் ஒருவரின் பெயரை யார் தேடினாலும் அவர்களைப் பற்றிய விபரங்கள் அடங்கிய visiting card கிடைக்கும்.

இந்த வசதிக்கு people card என்ற பெயரினை சூட்டியிருக்கிறது Google.இதனை G mail முகவரி மூலம் log in செய்து பின்னர் Google searchஇல் சென்று உங்களுடைய பெயர் அல்லது Add me to search அல்லது Edit search card என்று தேட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்,இதில் பயனர்கள் தங்களுடைய முழு விபரத்தையும் ஒன்லைன் வாயிலாக விண்ணப்பித்து. இச்சேவையைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்லைன் வாயிலாக தங்கள் விவரங்களை அனுப்புவதால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா,தகவல் மூலமாக பாதிப்பு ஏதாவது ஏற்படுமோ என்ற அச்சம் தேவையில்லை.

இதற்காக விசிடே பின்னூட்டல் வசதி ஒன்றும் தரப்பட்டுள்ளது.அதன் மூலம் ஊடகத் தகவல்கள் கசிவு குறித்த புகார்கள் அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஒன்லைன் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு பாதுகாப்பானது என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.