கூகுள் பிளே ஸ்ரோரில் சேர்க்கப்பட்ட திண்டுக்கல் மாணவன் கண்டுபிடித்த செயலி.!குவியும் பாராட்டுக்கள்.

Subscribe our YouTube Channel

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்படியை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பிரனேஷ்.13 வயதாகும் இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.5ம் வகுப்பு முதல் கம்பியூட்டர் கல்வியை கற்று வருகிறார்.இந்நிலையில் ஜெட் லைவ் சாட்(Jet Live Chat) என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளார். அதனை கூகுளில் சேர்க்க விண்ணப்பித்திருந்த நிலையில், இச்செயலியை பரிசோதித்த கூகுள் பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் அங்கீகரித்துள்ளது.

குறித்த செயலியை பிளே ஸ்ரோரில் சேர்த்துள்ளது. மாணவன் பிரனேஷ் கூறுகையில்,இந்த செயலியின் மூலம் ஆடியோ வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.அதிக அளவு எம்பி கொண்ட பைல்களை இந்த செயலியின் மூலமாக அனுப்ப முடியும்.முகநூலில் லைக் பதிவிடுவது போல இந்த செயலியின் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மீது 1000க்கும் மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது.

எனது செயலுக்கு கூகுள் 2048ம் ஆண்டு வரை ஒப்பந்தம் கொடுத்துள்ளது.இச்செயலியை 2018ம் ஆண்டுக்கு பின் வந்த மொடல் வெர்சன்களில் பதிவிறக்கம் செய்யலாம்.அதற்கு முந்தய மொடல் போன்களில் அப்டேட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த மாணவனின் கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.