நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சையளிக்க மறுத்த அரசு மருத்துவமனைகள்.!பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.!

Subscribe our YouTube Channel

கேரளாவின் ஆலுவா பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவன், விளையாட்டுத் தனமாக நாணயத்தை விழுங்கியுள்ளார்.இதனால் சிறுவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே பெற்றோர்,அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அந்த மருத்துவமனையில் குழந்தைக்கு மருத்துவர்களால் எக்ஸ்-ரே எடுக்கப்பட்டது.அதில் நாணயம் சிக்கியிருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால்கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதியில் இருந்து வந்ததால்,மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை அங்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்களும் சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.