கனமழையால் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு-80 பேர் வரை மண்ணில் புதைந்திருக்கலாம் என அச்சம்.!

Subscribe our YouTube Channel

கேரளா மாநிலம் மூணாறில் தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல பகுதிகளை அணைகள் நிரம்பியதோடு சுற்று வட்டாரப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவுக்குள் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சுமார் 80 பேர் மண்ணில் புதைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இடுக்கி மாவட்டத்தின் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது Twitter பதிவில் கூறியதாவது,இடுக்கியின் ராஜமலை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து,காவல்துறையினர், தீயணைப்பு படையினர்,வனத்துறை மற்றும வருவாய்துறை அதிகாரிகள் இந்த மீட்பு பணியில் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திரிசூரை சேர்ந்த மற்றொரு தேசிய பேரிடர் குழு விரைவில் சம்பவ இடைத்தை அடையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும் கேரளாவின் பல பகுதிகளில் கனமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.