‘ஹீரோக்களுடன் படுக்கையை பகிராததால் திரைப்பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன’-கே.ஜி.எப். நடிகை பகீர் குற்றச்சாட்டு.!

Subscribe our YouTube Channel

பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் ரவீனா டாண்டன்.இவர் சாது,ஆளவந்தான் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில் 90களில் பாலிவுட்டுக்கு என எழுதப்படாத சில விதிகள் இருந்தன.அவ்விதிகளை பின்பற்ற மறுத்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது.அவ்வாறு பல பட வாய்ப்புகளை நானும் இழந்தேன்.பலரும் என்னை திமிர் பிடித்தவள் என கூறினர். மீடியாவில் என்னைப்பற்றி அவதூறுகள் பரப்பப்பட்டன. கட்டுரைகளும் வெளிவந்தன.

கதாநாயகர்களுடன் எதாவது பிரச்னை அல்லது படுக்கையை பகிர்ந்து கொள்ள மறுத்தால் அப்படத்திலிருந்து நீக்கி விடுவார்கள். என்னுடைய சினிமா பயணத்தை முடிவுக்கு கொண்டு வர பலர் முயற்சி செய்தனர்.அதில் இருந்து தப்புவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.என்னை ஒரு ஹீரோவும் சிபாரிசு செய்ய மாட்டார்கள்.

ஏனெனில், நான் பட வாய்ப்புக்காக எந்த ஹீரோவுடனும் படுக்கையை பகிர்ந்து கொள்வதில்லை என கூறியுள்ளார். மேலும் இவர் தற்போது பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது குறிப்பிடத்தக்கது.