மனித உயிரணுக்கள் குறித்து இதுவரை இருந்த கருத்துக்கள் உண்மையில்லை.!புதிய தகவலை வெளியிட்ட இங்கிலாந்து விஞ்ஞானிகள்.!

Subscribe our YouTube Channel

மனித உயிரணுக்கள் பாம்பைப் போல கருமுட்டைகளை நோக்கி நீந்தி செல்கின்றன என 300 ஆண்டுகளுக்கும் மேல் கூறப்பட்டு வந்த கருத்து உண்மை இல்லையென ஆய்வில் தெரிய வந்துள்ளது.1678ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி ஆணின் உயிரணுக்கள் பாம்பினைப்போல நெளிந்து நீந்திச் சென்று பெண்ணின் கருமுட்டைகளை அடைவதாக அன்றைய ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.ஆனால்,இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக மற்றும் மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்தி உயிரணுவின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வுகள் குறித்து தற்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,வினாடிக்கு 50 ஆயிரம் காட்சிகளை பதிவு செல்லையும் திறன் கொண்ட நுண்ணுறு பெருக்கியை பயன்படுத்தி ஆய்வு செய்ததாக கூறியுள்ளனர்.அந்த ஆய்வில் உயிரணுக்கள் பாம்புபோல வளைந்து செல்வதில்லை என குறிப்பிட்டுள்ளனர். மேலும் ,அவை தண்ணீருக்குள் இருக்கும் நீர்நாயை போன்று சுழன்று சுழன்று செல்வதாக கூறியுள்ளனர்.