ஐஸ்கிரீம் சாப்பிடும் பூனையின் செம ரியாக்ஷன்.!இணையத்தை கலக்கும் வீடியோ.!

Subscribe our YouTube Channel

வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் பூனைகள் செய்யும் சேட்டைகள்,குறும்புகள் இரசிக்க கூடியதாக இருக்கும். பொதுவாக வீட்டில் பால், பால் பொருட்கள் இருந்தால் போதும். பூனை நைசாக வந்து யாரும் இல்லாத போது பாலைக் குடித்து விட்டுச் சென்று விடும். இதனாலேயே பல வீடுகளில் பால், மீன் போன்றவற்றை பூனையிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். சிலர் பூனையின் விளையாட்டை வீடியோ எடுத்து youtupe, பேஸ்புக்கில் போட்டு லைக்ஸ் பெறுவார்கள்.அந்த வகையில், தற்போது பூனை ஒன்று முதன்முதலாக ஐஸ்கிரீம் சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், பூனையின் உரிமையாளர் ஐஸ் கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் அருகில் பூனை இருக்கிறது. பின்னர், ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை பூனைக்கும் அவர் கொடுக்கிறார். முதலில் சற்று மோப்பம் பிடித்த பூனை,பால் வாடை வந்ததும் லபெக்கென் ஐஸ்கிரீமை வாயில் கவ்வியது.

அவ்வளவு தான்,ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை முதன்முதலாக பூனை அப்போது தான் கண்டிருக்கும் போல.வாயில் ஐஸ்கிரீம் அப்படியே இருக்க,பூனை செய்வதறியாமல் தலையை அங்குமிங்குமாய் ஆட்டுகிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.