கள்ளச்சாராயம் அருந்தியதால் 86 பேர் உயிரிழப்பு.!உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு.!

Subscribe our YouTube Channel

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இதனால் மதுபானக் கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பஞ்சாப்பில் விஷ சாராயம் அருந்திய 48 பேர் பலியாகியுள்ளார். இதுவரை டர்ன் ட்ரன் மாவட்டத்தில் 63 பெரும் அமிர்தசரஸில் 12 பெரும் படலாவில் 11பெரும் உயிரிழந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 கலால் மற்றும் 6 காவல்துறை அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.100க்கும் மேற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 25க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் அம்ரிந்தர்சிங் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் வெளியிட்ட Twitter பதிவில், “அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் மற்றும் டார்ன் தரன் ஆகியவற்றில் சந்தேகத்திற்கிடமான போலி மதுபானங்கள் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். கமிஷனர்,ஜலந்தர் பிரிவு விசாரணையை நடத்தி சம்பந்தப்பட்ட எஸ்எஸ்பி மற்றும் பிற அதிகாரிகளை ஒருங்கிணைப்பார். குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எவரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்.” என பதிவிட்டுள்ளார்.