இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு-சீரம் இன்ஸ்டிடியூட்

Subscribe our YouTube Channel

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இந்த கொடிய நோயை கட்டுப்படுத்த உள்நாட்டிலேயே 2 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவையாவன, ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி, ஐதராபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தாரின் கோவேக்சின் ஆகும்.

மற்றொரு தடுப்பூசியான இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படுகிற தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட சோதனைகளை புனேயை சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட 1600 பேருக்கு இந்த தடுப்பூசி சோதனையிடபடவுள்ளது.

இதன்படி 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் வசிக்கும் பத்து கோடி பேருக்கு தடுப்பு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும்,உலக வங்கியால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் (LMIC) கொண்ட நாடுகளாக வரையறுக்கப்பட்ட நாடுகளுக்கு, தடுப்பூசியின் விலையை 3 டாலர்கள் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.