ஜப்பானில் உருவாக்கப்பட்ட ட்வீஸ்ட்டுகள் நிறைந்த கண்ணாடியிலான கழிவறை.!

Subscribe our YouTube Channel

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஸ்மாட்ர் கிளாஸ் டெக்னோலஜியில் உருவாக்கப்பட்ட ஹைஜீன் கழிவறைகள் ஜப்பான் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. பிரிட்ஸ்கர் பரிசு பெற்ற கட்டிட கலைஞரான ஷிகெரு பான் என்பவர் சிமார்ட் கிளாஸை பயன்படுத்தி புதிய வகையான கழிப்பறைகளை உருவாக்கியுள்ளார்.இந்த கழிவறைகள் சுகாதாரமாகவும் பாதுகாப்பானதாகவும் பார்ப்பதற்கு வண்ணமயமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 2 பொது பூங்காக்களில் மட்டுமே இந்த கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ரக கழிவறையின் சிறப்பு யாதெனில் உள்ளே யாரும் இல்ல என்றால் உள்ளே உள்ளாய் அனைத்தும் தெரியும்.ஆனால் ஒரு நபர் உள்ளே சென்று கதவை மூடினால் அந்த கண்ணாடிகள் தாமாகவே மறைவை உண்டாக்கி கொள்ளும்.

வெளியில் இருந்து பார்த்தாலும் அதன் பின் எதுவும் தெரியாது.இந்த புதிய வகை கழிவறையின் மூலம் உள்ளே யாரேனும் இருக்கிறார்களா இல்லையா என இலகுவாக கண்டு கொள்ள முடியும் என கூறப்படுகிறது.