லஷ்மி ராமகிருஷ்ணன் ரூ.1.25கோடி நஷ்டஈடு கேட்பதாக ஆதாரத்தை வெளியிட்டு வனிதா குற்றச்சாட்டு.!

Subscribe our YouTube Channel

வனிதா விஜயகுமார்-பீட்டர்பால் என்பவரை கடந்த சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். பீட்டர்பால் அவரது மனைவிக்கு முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை மறுமணம் செய்து கொண்டதாக மனைவியான எலிசபெத் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து எலிசபெத்துக்கு ஆதரவாகவும் வனிதாவுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின.

நெட்டிசன்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் எலிசபெத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.அதில் நடிகையும் பெண் இயக்குனருமான லஷ்மி ராமகிருஷ்ணனும் ஒருவர்.இவருக்கும் வனிதாவுக்கு இடையே நேரலையில் வாக்குவாதம் ஏற்பட்டது.அதில் வனிதா தகாத வார்த்தைகளை உபயோகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து தன்னை தரக்குறைவாகப் பேசியதாக கூறி,வனிதாவுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பினார் லஷ்மி ராமகிருஷ்ணன்.இந்நிலையில்,லஷ்மி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட வனிதா,தன்னிடம் ரூ.1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட வனிதா,லஷ்மி ராமகிருஷ்ணன் அனுப்பியது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அதை சட்டப்படி எதிர்கொள்வேன்.தன்னுடைய வழக்கறிஞர் இதுகுறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார் என பதிவிட்டுள்ளார்.