லெபனான் மக்களுக்கு ஹீரோவான பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்.!

Subscribe our YouTube Channel

லெபனான் தலைநகர் பெய்ருட் நகரில் துறைமுகத்தில் பாரிய ஏற்பட்ட வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருப்பிடங்களை இழந்து நிர்கதியாக உள்ளனர். இந்நிலையில்,உருக்குலைந்து போயிருக்கும் லெபனானின் சம்பவம் நடந்த பகுதிக்கு பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரான் சென்று பார்வையிட்டார்.அங்குள்ள மக்களையும் அவர் சந்தித்தார். மெக்ரனின் தற்போதைய அரசை அகற்ற வேண்டும் என அங்கிருந்த மக்கள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அவர்,நான் அரசுக்கு உதவி வரவில்லை.உங்களுக்காக தான் வந்திருக்கிறேன் என கூறினார்.இதன் காரணமாக லெபனான் மக்கள் அவரை ஒரு ஹீரோவைபோல புகழ்ந்து கொண்டாடுகின்றனர்.லெபனானின் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்னரு பிரான்ஸ் பிரதமரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.