குட்டிகளை வேட்டையாட வந்த ஓநாய்களை தெறித்து ஓட விட்ட தாய் கரடி.!

Subscribe our YouTube Channel

அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டொன் தேசிய பூங்கா ஒன்று உள்ளது.அதில் வழிகாட்டியாக இருப்பவர் டெய்லர் பிளாண்ட்.இவர் ஒருநாள் அந்த பூங்காவை சுற்றி வளம் வந்த சமயத்தில் அங்கு 2 கரடி குட்டிகளை ஓநாய்கள் ஒன்றாக சேர்ந்து துரத்தி செல்வதைக் கவனித்தார்.அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்த அவர் தனது முகநூலிலும் பதிவேற்றம் செய்தார்.அந்த வீடியோவில் சில ஓநாய்கள் இரண்டு கரடி குட்டிகளை துரத்துகின்றன. ஓநாய்களை கண்டு கரடி குட்டிகளும், அதன் தாய் கரடியும் ஓட,ஒரு கட்டத்தில் கரடி குட்டிகள் ஓட முடியாமல் நின்றன.

அப்போது பின்னால் வந்த ஓநாய்கள்,கரடி குட்டிகளை சுற்றி வளைக்கின்றன.இந்நிலையில் தாய் கரடி தனது குட்டிகளை காப்பாற்ற ஓநாய்களுடன் சண்டையிட துணிகிறது.ஆக்ரோஷமாக வந்து ஒவ்வொரு ஓநாய்களையும் தாக்க முற்பட்டது. பின்னர், ஓநாய்கள் கரடி குட்டிகளை ருசி பார்க்க முடியாமல் அப்படியே அங்கிருந்து நகர்ந்து செல்கிறன.குறித்த பூங்காவில் சுமார் 90 முதல் 110 ஓநாய்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த விடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.