திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொலை செய்த கொடூர கணவன்.!

Subscribe our YouTube Channel

இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரப்பாவுக்கும் உமா என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 28ம் திகதி திருமணம் நடந்துள்ளது.ஆனால் சந்திரப்பாவுக்கு வேறொரு பெண்ணுடன் இரகசிய தொடர்பு இருந்ததாக தெரிகிறது.இதனை மனைவியான உமாவுக்கு தெரிய வரவே,கணவனிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.அந்த காரணத்தினால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில்,கடந்த இரு தினங்களுக்கு முன்பு உமா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவலறிந்து கத்தரித்து துடித்த உமாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில் அவர் கூறியதாவது,என் மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சந்திரப்பா கொடுமை படுத்தினான்.எனது மக்கள் இறப்பதற்கு முன் எனக்கு போன் செய்தாள்.கணவன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணுடன் வீடியோ காலில் பேசியதாகவும் இது பற்றி கேதுக்கு அடித்து உதைதாகவும் கூறினாள்.

உமாவை கணவனே கழுத்தை நெரித்து கொன்று விட்டு தூக்கில் தொங்க விட்டு தற்கொலை நாடகம் ஆடுகிறார் என குறிப்பிட்டிருந்தார்.அதனை தொடர்ந்து சந்திரப்பாவை கைது செய்த காவல்துறையினர் முறையாக விசாரித்தனர்.அதனால் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.