மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கு விற்கப்படுகிறதா TikTok .?

Subscribe our YouTube Channel

சீனாவுக்கு சொந்தமான TikTok செயலியை,இந்தியாவின் இறையாண்மையை கருத்தில் கொண்டு இந்திய அரசு தடை செய்தது.இதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றால் இச்செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவின் பைட் டான்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் Tiktok ஐ விற்க உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக வந்த தகவல்களுக்கு பிறகு அமெரிக்க அதிபரின் குறித்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சீனாவுக்கு சொந்தமான இச்செயலியை மைக்ரோசொப்ட் நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.இது தொடர்பாக மைக்ரோசொப்ட் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

TikTok நிறுவனம் வெள்ளிக்கிழமை(நேற்று) வெளியிட்ட அறிக்கையில்,வதந்திகள் அல்லது யூகங்களுக்கு நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும்,TikTok ன் நீண்டகால வெற்றியில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.