பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன்-பலூன் வாங்கி கொடுத்து சிறுவனை சமாதானம் செய்த பொலிசார்!

Subscribe our YouTube Channel

கொரோனா ஊரடங்கு காரணமாக பாடசாலைகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இதனால் பிள்ளைகளை கவனிப்பதில் பெற்றோருக்கு கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன.இந்நிலையில் ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் பஜனைகோயில் வீதியில் வசித்து வந்த சிறுவன் வீட்டில் சேட்டைகள் செய்ததால் கோபத்தில் பெற்றோர் சிறுவனை திட்டி கண்டித்துள்ளனர்.இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளான்.சிறுவனைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர்,கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் வழக்கு பதிவு செய்தனர்.இதனை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக பணிமனையின் பின் வழியில் எங்கு செல்வது என தெரியல நின்று கொண்டிருந்தான்.அதனை கண்டா காவலர்கள் சிறுவனை மீட்டு அவனுக்கு பலூன் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை வாங்கி கொடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.அத்துடன் சிறுவனுக்கும் பெற்றோருக்கும் தகுந்த அறிவுரை குறி சென்றனர்.