பஞ்சாபில் 8ம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய ரக மிதிவண்டி.!வீடியோ

Subscribe our YouTube Channel

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தின் லக்கோவல் கிராமத்தை சேர்ந்தவர் ஹர்மன்ஜோத்.8ம் வகுப்பு மாணவரான இவர் அவரது தந்தை வீர் தன்வீர் சிங்கிடம் புதிய மிதிவண்டி வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் வறுமை காரணமாக அவரால் புதிய மிதிவண்டியை வாங்க முடியவில்லை. இதன் காரணமாக தந்தையும் மகனும் இணைந்து புதிய வடிவிலான மிதிவண்டியை உருவாக்கியுள்ளனர். முன்புறத் தோற்றத்தில் பார்த்தால் பைக் போலவும், பின்பக்கத்தில் மிதிவண்டி போலவும் இயங்கும் இந்த மிதிவண்டியை உருவாக்கியுள்ளனர்.

இதனை பலரும் வித்தியாசமாக பார்த்து வருகின்றனர்.பழைய பொருட்களில் இருந்து இந்தமிதிவண்டியை உருவாக்க 10 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும்,பலரும் இந்த சைக்கிளுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புவதாகவும் மாணவன் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.