ரூ. 3.50 லட்சம் பெறுமதியான ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன்.!

Subscribe our YouTube Channel

ஆடிமாதம் என்றாலே அம்மன் ஆலயங்களில் கொண்டாட்டம் தான்.ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் பெரும்பாலான ஆலயங்கள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில்,ஒரு சில ஆலயங்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பக்தர்களுடன் சிறப்பு பூசைகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடியில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஆலயத்தில் ஆடிமாத திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.ஆனால்,இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக குறைந்த அளவு பக்தர்களுடன் திருவிழா நடத்தப்பட்டது.

அந்த விழாவில் அம்பாளுக்கு ரூ.20,50,100,500 என புதிய ரூபாய் நோட்டுக்களால் கோயிலின் முகப்பு தொடக்கி கருவறை வரைக்கும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அந்த ரூபாய் நோட்டுக்களின் பெறுமதி சுமார் 3.50 லட்சம் ஆகும்.அப்பகுதியை பல பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அப்பணத்தை யாரும் எடுத்து சென்றிடாதபடி ஆங்காங்கே பத்துக்கப்பு போடப்பட்டிருந்தது.