சுயநினைவுடன் மூன்று வார்த்தையில் மொத்த அன்பையும் வெளிப்படுத்திய S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்.!

Subscribe our YouTube Channel

பின்னணிப் S.P.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கடந்த 5ம் திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த ஒருவரத்துக்கு முன் உடல்நிலை மோசமடைந்திருந்த நிலையில் தற்போது 95%குணமடைந்து உள்ளதாக அவரது மகன் S.P.சரண் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு பேணவும் பேப்பரும் கொடுக்கப்பட்டது. அதில் I Love You All என எழுதியுள்ளார்.

சற்று லேசான கிறுக்கலாக அவர் எழுதியிருக்கும் அந்த வார்த்தையானது சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் தனக்காக பிரார்த்திக்கும் அனைவருக்கும் அவரது அன்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

அவர் எழுதிய குறிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள் விரைவில் பூரண நலம் பெறுவார் என்ற நம்பிக்கையும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.