ஒரே வாரத்தில் 14 சிம் கார்டுகளை மாற்றிய சுஷாந்த் சிங்.!வழக்கை விசாரிக்க சென்ற அதிகாரியை தனிமைப்படுத்திய பொலிசார்.!

Subscribe our YouTube Channel

பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இந்நிலையில்,கடந்த ஜூன் மாதம் 9ம் திகதியிலிருந்து 14ம் திகதி வரை பதினான்கு சிம் கார்டுகளை அவர் மாற்றி இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்,சுஷாந்தின் மரணம் தொடர்பில் நடிகையும் அவரது காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது சுஷாந்தின் தந்தை புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சுஷாந்தின் முன்னாள் செயலாளரான திஷாசாளியின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதையும் சிறப்புப் புலணாய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.திஷாசாலி இறப்பதற்கு முன்பதாக சுஷாந்திடம் பல முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.இதனால் சுஷாந்த் யாராலோ அச்சுறுத்தப்பட்டார் என்பதனையும் அதன் காரணமாகவே அவர் பல சிம்கார்டுகளை மாற்றியதும் தெரிய வந்துள்ளது.

எனவே சுஷாந்தை மிரட்டியவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் காவல்துறை அதிகாரியை மும்பை பொலிசார் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், இது அரசியல் அல்ல,பொலிஸ் அதிகாரி வினய் திவாரிக்கு நடந்தது,சரியானது கிடையாது.பொலிசார் அவர்களது பணியை மேற்கொள்கின்றனர்.இதுகுறித்து எங்கள் டிஜிபி அவர்களிடம் பேசுவார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பீகார் தலைமை காவல்துறை இயக்குநர் குப்தேஸ்வர் பாண்டே தனது ட்விட்டர் பதிவில்,வழக்கு விசாரணைக்கு மும்பை சென்ற ஐபிஎஸ் அதிகாரி வினய் திவாரியை கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தியுள்ளனர் என்று அந்த அதிகாரின் கையில் தனிமைப்படுத்தல் முத்திரை குத்தப்பட்ட புகைப்படத்துடன் அவர் பதிவேற்றியுள்ளார். அதில் ஓகஸ்ட்.15ம் திகதி வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.