சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனையே சுத்தியலால் அடித்து கொன்ற தந்தை.!சிசிடிவி காட்சி..

Subscribe our YouTube Channel

ஆந்திராவின் விசாகப்பட்டின மாவட்டம் பெந்துர்த்தி மண்டலம் சின்னமுஷிடிவாட சத்யநகரில் போரிபதி வீரராஜு என்பவர் வசித்து வருகிறார்.72 வயதாகும் இவர் கடற்படையில் பனி புரிந்து ஒய்வு பெற்றிருந்தார்.இவரது மகன் ஜால்ராஜும் கடற்படையில் பணி புரிந்து வருகிறார்.3 மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார் போரிபதி வீரராஜு.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தந்தைக்கும் மகனுக்கும் சொத்து காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை மகன் அவர்களது வீட்டில் கார் பார்க்கிங்கில் அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில் கையில் சுத்தியலுடன் வந்த தந்தை மகனின் தலையில் ஓங்கி சுத்தியலால் அடித்தார்.ஒரு அடியிலேயே மகன் இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.பின் இதனை கண்டா உறவினர்கள் அவரை அருகில் உள்ள பெந்துர்த்தி மருத்துவமனையில் அனுமதித்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே ஜால்ராஜின் உயிர் பிரிந்தது.தொடர்ந்து விசாகப்பட்டினம் காவல்நிலையத்தில் தந்தை சரணடைந்தார்.அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் கே.ஜி.எச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.