மேடையில் கண்கலங்கிய சோனு சூட்-குவியும் வாழ்த்துக்கள்.!வைரலாகும் உருக்கமான வீடியோ.!

Subscribe our YouTube Channel

கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த இக்கட்டான காலகட்டத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவி செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். இதனால் இவர் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக இடம் பிடித்துள்ளார்.ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு,தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார்.அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டி உழுத ஆந்திர மாநில விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

வாழ்வதாரத்திற்காக வீதியில் சிலம்பம் சுற்றி பிழைப்பு நடத்தி வந்த மூதாட்டியை தற்காப்பு கலை பயிற்சியாளராக மாற்றினார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்தநாள் பரிசாக கொரோனாவால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தர உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில்,தற்போது கபில் சர்மா தொகுத்து வழங்கும் பிரபல பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் சில நிமிட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.அந்த வீடியோவில் சோனு சூட் மூலம் உதவி பெற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவருக்கு உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.இதனைப் பார்த்த சோனு சூட்,மேடையிலேயே கண்கலங்கினார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த பலரும் சோனு சூட்டை பாராட்டியும் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.