மாதவிடாயினால் உண்டாகும் மனஅழுத்தம்..!இதற்கு தீர்வு தான் என்ன.?

Subscribe our YouTube Channel

விசித்திரமான இந்த உலகம் மிகவும் சவால்கள் நிறைந்தது.அதுவும் பெண்களுக்கு வாழ்வில் சவால்கள் மட்டுமே நிறைந்திருக்கும். உடலில் முதல் உள்ளம் வரை அத்தனையும் சவால்களே.பெண்ணின் பருவம் முதல் பத்தியம் வரை அத்தனையும் சவால்களே.மாதவிடாய் காலத்தில் பல பெண்கள் படும் வலிகளும் வேதனைகளும் சொல்லித் தீராதவை. மாதவிடாயின் காரணமாக பல பெண்கள் பெரும்பாலும் கடுமையான மன அழுத்தத்துக்கு அலைகிறார்கள். சில நேரங்களில் இந்த மன அழுத்தமானது. தீவிர வடிவங்களை எடுக்கும்.

ஒவ்வொரு பெண்ணும் தனக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து எப்படி வெளிவருவது என தன்னை தானே புரிந்து வைத்துக் கொள்ளல் மிகவும் அவசியமானதாகும்.ஏனெனில் இதுபோன்ற மாதவிடாய் மனஅழுத்தத்தின் பொது வெளியில் இருந்து தீர்வு கிடைக்கப் போவதில்லை.அதாவது,மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் மன அழுத்தத்தில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை அறிதல் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

காரணம்,இந்த தீவிர மன அழுத்தத்தின் போது அவர்கள் தசைப்பிடிப்பு,வயிற்று வலி, மூட்டு மற்றும் இடுப்பு வலி மற்றும் மனச்சோர்வு போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாற்றங்கள் அவர்களின் இளமை காலத்தில் நிகழும் மாற்றங்களுடன் தொடர்புடையவையே.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் மாதவிடாய் காலங்களை சரிசெய்ய உதவும். மேலும் இவைபெண்ணுடலில் பசி,செரிமான சக்தி மற்றும் ஆற்றல் மட்டங்களை பாதிக்கும், அத்துடன் அவை பெண்களின் மனநிலையையும் பாதிக்கும் என உளவியல் ரீதியாக சொல்லப்பட்டுள்ளது.

மன அழுத்தம் என்பது ஒருவித மனநிலைக் கோளாறு.இது மாதவிடாய் காலங்களில் 5% பெண்களை பாதிக்கிறது என சொல்லப்படுகிறது.இவ்வாறு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் மிகவும் அவசியம்.Reaxation Technique ஐ பயன்படுத்துவதன் மூலம் மன அழுத்தம் குறைகிறது.

அதாவது யோகா செய்தல்,தியானம் செய்தல்.மசாஜ் செய்தல் போன்றவற்றை பின்பற்றலாம்.போதுமான நித்திரை அவசியம். முறையற்ற நித்திரை முறைகளும் ஹார்மோன்களை பாதிக்கும். மேலும்,ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்ள வேண்டும்.

உங்கள் உணவில் முழு தானியங்கள் மற்றும் மாவுச்சத்துள்ள காய்கறிகளைச் சேர்த்தல் மிகவும் நல்லது. இது மாதவிடாய் காலங்களில் மனநிலை மாற்றத்தையும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.பால் மற்றும் தயிர் போன்ற கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.உணவில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்தல் நல்லது.

ஆல்கஹால் மற்றும் காஃபின் போன்றவற்றில் இருந்து ஒதுங்கி இருப்பதே சிறந்தது.கால்சியம் மற்றும் விட்டமின் B6 ஆகிய இரண்டும் மன அழுத்தத்தின் உடல் மற்றும் உளவியல் அறிகுறிகளைக் குறைக்க வேலை செய்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இவ்வாறு உடலுக்கு எது அவசியமோ அந்த நேரங்களில் எது சரியாக அமைகிறதோ அதனை முறையாக பின்பற்றினாலே மாதவிடாயினால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.