தற்கொலை செய்து கொண்ட விஜய் இரசிகர்- “தலைவன் படம் பார்க்காமலே போறேன்… தலைவனையும்..லவ் யூ தலைவா”என Twitter ல் உருக்கம்.!

Subscribe our YouTube Channel

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.இவர் தன்னைச் சுற்றி பெரும் இரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.விஜயின் நடிப்பே அடுத்து வர தயாராக இருப்பது மாஸ்டர் திரைப்படம். இந்நிலையில் ரிஷிவந்தயத்தை சேந்த பாலா என்ற 21 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இளைய தளபதியின் தீவிர இரசிகரான இவர் கடந்த ஓகஸ்ட் 11ம் திகதி அவரது Twitter பதிவில்’தலைவன் படத்தை பார்க்காமலே போறேன்’ தலைவனையும் ..love u தலைவா என பதிவிட்டு அதில் விஜயின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,அதே நாளில் தனது மற்ற ட்வீட்களில், இங்கே ஒருவருக்காவது என்னை பிடிக்குமா என்றும், நான் அவ்வளவு கேவலமானவனா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார் அந்த இளைஞர்.இளம் வயதில் பாலா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த விஜயின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ்,நடிகர் ஷாந்தனு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து #RIPBala என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான Twitter ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. பாலாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் பலரும் எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாகாது என்பதையும் தங்களது ட்விட்டர் பதிவுகளில் தெரிவித்து வருகின்றனர்.