‘சூர்யாவுக்கு நடிக்க தெரியாது’என நடிகரை வம்பிழுக்கும் சர்ச்சை நாயகி மீரா மிதுனின் அடுத்த சர்ச்சை வீடியோ.!

Subscribe our YouTube Channel

சர்ச்சைகளுக்கு பெயர்போன மீரா மிதுன் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை வம்பிழுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.மொடலிங் துறையில் இருந்து நடிக்க வந்த மீரா பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலராலும் அறியப்பட்டார்.சமீபத்தில்,மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தைப் போல், தனக்கும் தமிழ் திரையுலகில், நிறைய பேர் தொல்லை கொடுத்தனர் என, கூறினார்.அவர் இவை அனைத்தையும் கடந்து வந்துள்ளதாகவும் தனக்கு தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலை வெளியிடப் போவதாகவும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து,சூர்யாவுக்கு நடிப்புக்கு spelling கூட தெரியாது என புதிதாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.அது மட்டுமில்லாமல், நடிகை திரிஷா மூலமும் நான் இழந்த பட வாய்புகள் குறித்து வீடியோவை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வெறும்,5.5 அடி உயரமே இருக்கும் திரிஷா எப்படி மிஸ் சென்னை ஆனார். என்னை அறிந்தால் படத்தில் என்னுடைய காட்சிகளை வேண்டுமென்றே நீக்கினர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் அவரது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி கலாய்த்தும்,திட்டியும் வருகின்றனர்.