சுஷாந்த் சிங்கின் மரண விவகாரம் அரசியலாக்கப்படுகிறது-முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி குற்றச்சாட்டு.!

Subscribe our YouTube Channel

பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.அவரின் மரணத்துக்கான காரணம் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்டது. ஆனால் அவரது ரசிகர்கள் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு காரணம் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் என கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் கதையான ரியா மீது பலர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதன் காரணமாக ரியா தலைமறைவாக இருந்து வருகிறார். சமீபத்தில் வீடியோ ஒன்றினை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்த ரியா அதில் கூறியதாவது,சுஷாந்தின் மரணம் தொடர்பாக பலரும் என்னை குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் சாத்தியமே ஜெயிக்கும் என கூறியிருந்தார்.மேலும்,பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை விவகாரம் தேவையில்லாமல் பெரிதுபடுத்தப்படுவதாக அவரது முன்னாள் காதலி ரியா தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டப் பேரவை தேர்தலில் அரசியல் நோக்கத்திற்காக சிலர் தன்னை பலி ஆடாக ஆக்க முற்படுகிறார்கள் என உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்த பிரமானப் பத்திரத்தில் ரியா தெரிவித்துள்ளார்.சுஷாந்த் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவ்வழக்கை CBI விசாரணை செய்து வருகின்றது. CBI தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான ரியாவின் பெயரும் முதலில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.