108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் திருநீர்மலை ஆலயம்

Subscribe our YouTube Channel

திருநீர்மலை ஆலயமானது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.இவ்வாலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை மாநகரில் பல்லாவரத்திலிருந்து 6.கி.மீ துரத்தில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மிக அமைதியான சூழலில் காணப்படுகிறது.இவ்வாலயதினுள் செல்லும்போது இனம் புரியாத புத்துணர்வு ஏற்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்திருக்கோவிலில் சென்று வழிபட்டால் திருவாலி,திருக்குடந்தை, நாச்சியார் கோவில் மற்றும் திருக்கோயிலூரை வழிபட்ட பலனை பெற முடியும் என ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வாரும்,ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதியை வணங்கிய பலனை பெறலாம் என பூதத்தாழ்வாரும் குறிப்பிட்டுள்ளனர்.

அர்ஜூனனுக்கு நரசிம்மர் அசுவமேதயாகம் மூலம் காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது.மார்க்கண்டேயர்,பிருகு மற்றும் வால்மீகி ஆகிய முனிவர்களின் தவத்திற்கு இணங்க ஸ்ரீரங்கநாத பெருமான் சுயம்பு மூர்த்தியாக தோன்றியதாக தல வரலாறு கூறுகிறது.இவ்வாலயத்தில் எம்பெருமான் நின்றான், இருந்தான், நடந்தான் மற்றும் கிடந்தான் என நான்கு நிலைகளில் அருள் பாலிக்கிறார்.

நின்றான் என்பது மலையின் கீழ்பகுதியில் உள்ள நீர்வண்ண பெருமாளையும், இருந்தான் என்பது மலையின் மேல் பகுதியில் நரசிம்ம பெருமான் சாந்தமாய் அமர்ந்த நிலையிலும், கிடந்தான் என்பது பெருமாள் ஆதிசேஷன் மேல் சயன கோலதிலும்,நடந்தான் என்பது வாமன அவதாரமான உலகளந்த பெருமாள் ஒரு காலை தூக்கிய நிலையிலும் காட்சி அளிக்கின்றனர்.