ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக சண்டையிடும் புலிகள்.!மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ

Subscribe our YouTube Channel

கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா தேசிய உயிரியல் புங்க ஒன்றில் ஏராளமான உயிரினங்கள் உள்ளன.அந்த பூங்காவில் ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரு புலிகள் ஒன்றோடொன்று ஆக்ரோஷமாக பாயந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தது.வேலியின் ஒருபுறத்தில் ஒரு புலியும்,மறுபுறத்தில் மற்றொரு புலியும் நின்று கொண்டிருந்தது.இரண்டும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை.இந்த புலிகள் ஆக்ரோஷமாக சண்டையிடுவதை அப்படியே வீடியோவாக செல்போனில் பதிவு செய்த அவர்கள் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

மேலும்,பொதுவாக புலிகள் தங்களது பலத்தை நிரூபிப்பதற்காகவும்,பெண் புலியோடு சேருவதற்காகவும் சண்டையிடும்.பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் புலிகள் இது போன்ற சண்டைகள் அடிக்கடி நிகழும்.இது கடந்த வருடம் எடுக்கப்பட்ட வீடியோ வாக இருந்தாலும்,வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.