டிராக்டரின் உதவியுடன் பசுவில் பால் கறந்த இளைஞர்.!இணையத்தில் வைரலாகும் வீடியோ..

Subscribe our YouTube Channel

இந்தியாவின் மகாராஷ்ராவை சேர்ந்த ஒரு இனைஞன் டிராக்டரைப் பயன்படுத்தி பசுவின் மடியில் இருந்து பாலைக் கறக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.டிராக்டர் மூலம் பசுவில் இருந்து பால் கறக்கும் வித்தையைக் கண்டுபிடித்த இளைஞரை மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.இந்த வீடியோவை தனது Twitterபக்கத்தில் பகிர்ந்த அவர்,குறித்த இளைஞர் எப்படி டிராக்டரைபயன் படுத்தி பசுவின் மடியிலிருந்து பாலை கறந்தார் என்பதையும் விளக்கியுள்ளார்.

அதாவது அந்த இளைஞர் டிராக்டரின் புகைப்போக்கி குழாய்க்கு அருகில் உள்ள காற்று உறிஞ்சும் கருவியை அகற்றி அதற்குப் பதிலாக பால் உறிஞ்சம் பைப் கருவிகளை பொறுத்தியுள்ளார். மறுமுனையை பசுவின் பால் மடியில் பொருத்தி விட்டு, டிராக்டரை இயங்கச் செய்கிறார்.

அடுத்து ,2-3 நிமிடங்களில் பசுவின் மடியில் இருந்து எளிதாக பால் உறிஞ்சப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.மேலும், இது போன்ற வீடியோக்களை பலரும் எனக்கு அனுப்புகின்றனர்.எங்களது டிராக்டர் பலதரப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுகிறது. இது எனக்கு பார்ப்பதற்கு புதிதாகவும், வியப்பாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.