அருவியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி பரிதாப பலி.!

Subscribe our YouTube Channel

தெலுங்கானாவில் அடிலாபாத் மாவட்டத்தில் லொத்தி என்னும் அருவி மிகவும் பிரபலம்.கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கட்டுப்பாடுகளையும் மீறி இளைஞர் குழு ஒன்று குறித்த அருவிக்கு சென்றுள்ளது.அந்த குழுவை சேர்ந்த இளைஞருள் ஒருவரான 19வயது சச்சின் என்ற நபர் அருவியின் மேல்பகுதியில் நின்று செல்பி எடுத்துக்க முயற்சித்துள்ளார்.அந்த வேளையில் அவரது செல்போன் அருவியில் விழுந்து விடவே அதை பிடிப்பதற்காக குனிந்துள்ளார். அப்போது கால் வழுக்கி அருவியில் விழுந்துள்ளார்.

விழுந்த உடனேயே சிறிது நீச்சலடித்து சமாளித்த சச்சின்,பின்னர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினருடன் களமிறங்கிய காவல்துறையினர் 2 நாட்களின் பின் அதாவது செவ்வாய்க்கிழமை சச்சினின் உடலை மீட்டுள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.