திமிங்கலத்திடமிருந்து உயிரைக் காப்பாற்ற சுற்றுலா பயணிகளின் படகில் ஏறிய நீர்நாய்.!வைரலாகும் வீடியோ.

Subscribe our YouTube Channel

அமெரிக்காவில் கொலைகார திமிங்கலத்திடம் இருந்து தப்பித்துக் கொள்ள கடல் நீர் நாய் ஒன்று படகில் ஒளிந்து கொண்டு உயிரைக் காப்பாற்றியது.அலாஸ்கா பகுதியில் சிலர் படகில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது திமிங்கலத்தை கண்ட அவர்கள் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.அதே நேரத்தில் கடல் நீர் நாய் ஒன்றினை இரைக்காக துரத்திக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

திமிங்கலத்திடம் இருந்து தப்பிக்க முயன்று சுற்றுலாப் பயணிகள் இருந்த படகில் ஏறிக் கொண்டது அந்த நீர்நாய்.அதில் இருந்த மனிதர்களை கண்டதும் வெருண்டு குதிக்க முயன்றாலும் திமிங்கலத்திடம் இருந்து தப்பிக்க சிறிது நேரம் படகிலேயே சுற்றித் திரிந்து விட்டு திமிங்கலம் சென்றவுடன் மீண்டும் கடலில் குதித்துக் சென்றது.