13 வயது சிறுமிக்கு 28 வயதுடைய நபருக்கு திருமணம் செய்து வைத்த தாய்.!

Subscribe our YouTube Channel

திருச்சி மாவட்டம் துவாக்குடி அடுத்த தேவராயநேரி நரிக்குறவர் காலணியி சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவருக்கு அவரது தாய்மாமனான 28 வயதுடைய அருண்பாண்டி என்பவருடன் பெற்றோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அருண்பாண்டி தேனி மாவட்டத்திலுள்ள தென்றல் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெண்ணுக்கு வேறு நபருடன் காதல் இருந்ததால் அருள்பண்டியனை திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆயினும் பெற்றோர் வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகளை செய்தனர்.இதன் காரணமாக அப்பெண் காதலனுடன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனை அருள்பண்டி தனது உடன்பிறந்த சகோதரியான மகேஸ்வரியை செல்போனில் தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு மகேஸ்வரி உனக்கு பெண் இல்லையா….என் மகளை கட்டிக் கொள்..என தனது 13 வயதேயான குழந்தையை கூறியுள்ளார். அதற்கான திருமண ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.28 வயதுடைய அருள்பண்டியனுக்கு 13 வயது சிறுமியை பலர் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த குழந்தை திருமணத்தை தடுக்க காவல்துறையினரோ அரசு அதிகாரிகளோ குழந்தைகள் நல அமைப்போ தடுக்க முன் வரவில்லை. அத்துடன் சிறுமியின் நிலை குறித்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டும் எந்த பலனும் கிட்டவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.