பப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.!

Subscribe our YouTube Channel

திருவட்டார் அருகே செறுகோல் ஆசாரிபெற்றவிளை பகுதியை சேர்ந்தவர் மர வியாபாரியான சசிகுமார். இவருக்கு 20 வயதான பபிஷா என்னும் மகள் உள்ளார்.பபிஷா திருவிதாங்கோடு பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் செயல்படாத நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.பொழுது போக்கிற்காக பப்ஜி விளையாட்டை விளையாடவும் ஆரம்பித்துள்ளார்.இந்நிலையில் கடந்த 19ம் திகதி வீட்டில் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்த பபிஷா திடீரென மாயமானார்.இது தொடர்பாக பெற்றோர் திருவட்டார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் காவல்துறையினர் அவரை தேடிவந்தனர்.

இந்நிலையில் கழுத்தில் மாலையுடன் அந்த காவல்நிலையத்துக்கே வந்திருந்தார் பபிஷா.அவருடன் திருவாரூரை சேர்ந்த பப்ஜி காதலன் அஜின் பிரின்ஸ் என்பவரும் வந்திருந்தார்.அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பப்ஜி விளையாட்டின் பொது வெற்றியை நோக்கி தன்னை பத்திரமாக வழிகாட்டினார்.

அதனால் அவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார் பபிஷா.உரடங்கள் பெறமுடியாமல் தவித்ததாகவும் 19ம் திகதி காரில் வந்த பிரின்ஸ் உடன் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். அத்துடன் தங்களது திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மேஜர் என்பதால் பெற்றோரிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர் காவல்துறையினர்.தொடர்ந்து அருகில் உள்ள கோயிலில் மாலை மாற்றிய இருவரும் பப்ஜி காதலனுடன் திருவாரூருக்கு கோரப்பட்டு சென்றார் பபிஷா.