குழந்தையின் தொப்புள் கொடி தாயத்தின் மகத்துவம்…

Subscribe our YouTube Channel

தாய்க்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் இருக்கும் ஓர் அற்புத பிணைப்பு தொப்புள்கொடி. இந்த பிணைப்பின் மூலமே கருவில் இருக்கும் குழந்தைக்கு ஒக்சிஜன் மற்றும் உணவுச் சத்துக்கள் செல்கிறது.இதன் மூலம் குழந்தை கரிய அமில வாயுவை வெளியேற்றுகிறது.தொப்புள் கொடியில் மூன்று இரத்த குழாய்கள் இருக்கும்.அதில் 2 தமனிகளும் 1 சிரையும் ஆகும்.தொப்புள் கொடியில் 80மி.லி இரத்தம் இருக்கும்.ஒருவேளை குழந்தைக்கு ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அல்லது இதய நோய் இருந்தாலோ ஒரே ஒரு இரத்தக்குழாய் மட்டும் தெரியும்.

இத்தகைய தொப்புள் கொடியானது குழந்தை பிறந்த பின்னர் வெட்டப்படுகிறது. அதன் பின் அதில் சிறிய முடிச்சு போட்டு விடுவார்கள்.பிறந்த குழந்தையின் உடலில் நோய்க் கிருமிகள் பரவியிருந்தாலும் தொப்புள் கொடியில் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் ரத்தம் கசியும்.

குழந்தையின் தொப்புள் கோடி 6 முதல் 8 நாட்களுக்குள் தானாக விழுந்து விடும்.அந்த இடத்தில் மெல்லிய தோல் மூடும். அதன் மீது வடு உண்டாகும். அதுவும், 12-15 நாள்களுக்குள் ஆறிவிடும்.விழுந்த பகுதியை பத்திரமாக எடுத்து குழந்தையின் இடுப்பிலோ அல்லது கழுத்திலோ தாயத்து போன்று கட்டி வைத்தனர் நம் முன்னோர்கள்.

குழந்தைக்கு ஏதேனும் பாரிய நோய் அல்லது தீர்க்க முடியாத நோய் ஏற்பட்டாலோ அந்த செல்களை பயன்படுத்தி குணப்படுத்தி வந்தனர். தற்போது தொப்புள் கொடியின் மருத்துவம் குறித்து நவீன மருத்துவமும் உறுதிப்படுத்தியுள்ளன.