அழகுடன் சேர்ந்த ஆபத்து – இணையத்தில் வைரலாகும் அரிய வகை நீலநிறப் பாம்பின் வீடியோ.!

Subscribe our YouTube Channel

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பர்.ஆனால் அரிய வகையான அதேசமயம் அழகான பாம்பைக் கண்டால் மக்கள் கூட்டம் அதனை ரசிப்பதற்கு அலை மோதும். இவ்வுலகில் பல அரியவகை உயிரினங்கள் உள்ளன.அதிலும் நீல நிற பாம்புகள் உலகில் காண்பது என்பது மிக அரிது.தற்போது இணையத்தில் சிவப்பு ரோஜாவின் மீது அமர்ந்து இருக்கும் பிரகாசமான நீலநிற பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது.இந்த பாம்பு இனங்கள் குறித்து மாஸ்கோ உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறியதாவது இந்த நீல வகை பாம்புகள் வெள்ளை உதட்டை கொண்டிருக்கும்.இது இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோரில் காணப்படும் ஒரு அரியவகையானது ஆகும்.

இந்த வகை பாம்புகள் பச்சை நீறத்தில் அதிகளவில் காணப்படும். ஆனால் இந்த பாம்பானது அரிதிலும் அரிதாக நில நிறத்தில் காணப்படுகிறது எனக் கூறியுள்ளனர். மாஸ்கோ உயிரியல் பூங்காவின் பொது இயக்குனர் ஸ்வெட்லானா அகுலோவா கூறியதாவது சில ஜோடி நீல நிற பாம்புகள் பச்சைப் பாம்பு குட்டிகளை ஈனும்.

வெள்ளை உதடு கொண்ட பாம்புகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கும் பாம்பு குட்டிக்ளைப் பெற்றெடுக்கிறது எனக் கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.