பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர்கள்.!

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்களின் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 4 மிக விரைவில் ஆரம்பமாக உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பை விஜய் டிவி அவர்களது அதிகாரப்பூர்வ Twitter பக்கத்தில் பிக்பாஸ் சீசன் 4க்கான புரோமோவை வெளியிட்டிருந்தனர்.இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த முதல் ப்ரோமோ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது.

இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யாரென தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 4ல் ஷிவானி நாராயணன், அனு மோகன், பூனம் பாஜ்வா, சூர்யா தேவி, சனம் ஷெட்டி, கோபிநாத், ரம்யா பாண்டியன், புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, அம்ரிதா, அதுல்யா ரவி, கிரண், வித்யுலேகா ராமன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.