பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர்கள் வெளியீடு.!

Subscribe our YouTube Channel

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஆகும்.இதனை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த ஆண்டு கொரோனா காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. தற்போது விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வரும் ஒக்டொபர் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு முன்பு வெளியான கிப்ரானின் இசையுடன் இரண்டாவது விளம்பரத்தில் கமல்ஹாசனின் ஆடம்பரமான செயல்திறன் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.அந்த வகையில் மொத்தம் பதினான்கு பிரபலங்கள் இதுவரை 11 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

சனம் ஷெட்டி,கிரண் ரதோட்,கரூர் ராமன்,ஷாலு ஷம்மு,ரியோ ராஜ்,அமுதவாணன், அமிர்தா ஐயர்,ஷிவானி நாராயணன்,புகழ், ஆர்.ஜே.வினோத்,பில்ஜி முருகதாஸ் ஆகியோர் பங்கேற்க இருப்பதாக பெயர்பட்டியல் வெளியாகியுள்ளது.தொற்றுக்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழு உறுப்பினர்கள் எடுத்து வருகின்றனர். உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களை வீட்டிற்குள் நுழைவதற்கு முன்னர் தனிமைப்படுத்தியதாக தகவல்கள் உள்ளன.

வார இறுதி அத்தியாயங்கள் நேரடி பார்வையாளர்கள் இல்லாமல் படமாக்கப்படும் என கூறப்படுகிறது. வீட்டில் செய்யப்பட்ட சில மாற்றங்களைப் பற்றி ஒரு பேச்சு நடந்து வருகிறது.முந்தைய சீசனைப் போலவே இந்த சீசனிலும் நீச்சல் குளத்தில் தண்ணீர் இருக்காது எனக் கூறப்படுகிறது.பிக்பாஸ் சிசன் ஐ காண மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.